YouTube video

TN CM Edappadi Palaniswami Press meet in Salem : சேலம் கந்தம்பட்டி பகுதியில் ரூபாய் 33 கோடியில் தமிழக முதல்வர் பழனிசாமி நான்கு வழி பாதைக்கான மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 75 ஆயிரம் படுக்கைகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மண்டலங்களுக்கு இடையே போக்குவரத்தை தொடங்கியதால் நகரங்களில் இருந்து பல கிராமங்களுக்கு சென்றனர். இதனால் கிராமங்களில் வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்தவே வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம் அதன் தலைவரும் நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்துள்ளார்.

என்னை கவர்ந்த நடிகை இவர் தான், ஆனால் தமிழ் சினிமா அவருக்கான இடத்தை கொடுக்கல – இயக்குனர் பாலா ஓபன் டாக்!

மேலும் காவிரி உபரிநீர் திட்டத்தின் மூலமாக சேலத்திற்கு நீர் திறந்து விடப்படும். அதாவது பருவமழை காலங்களில் மேட்டூர் அணை நிரம்பி வழியும் நீர் கடலில் கலக்காத படி இந்த தண்ணீரை சேலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உபரி நீர் மட்டும் தான் சேலத்திற்கு வழங்கப்படும் என்பதால் டெல்டா விவசாயிகள் கவலை அடைய தேவையில்லை எனவும் கூறியுள்ளார். இதனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாது என கூறியுள்ளார்.

மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இப்போது எதுவும் கூற முடியாது வைரஸ் தொற்று கட்டுக்குள் வருவதை வைத்து தான் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

பொதுப் போக்குவரத்தை துவங்குவதும் வைரஸ் தொற்று குறைவதை வைத்து தான் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் தான் வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.