TN CM Edappadi Palanisamy presents President Police Medals
TN CM Edappadi Palanisamy presents President Police Medals

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை, ஊர்காவல் படை, குடிமை பாதுகாப்பு துறை மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு காவல் துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்க இருக்கிறார்.

குறிப்பாக, இந்த ஆண்டு காஞ்சிரபும் மாவட்டத்தில் 40 நாட்களாக இரவு பகல் பாராமல், அத்திவரதர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்குகிறார்.

நாளை நடக்கவிருக்கும் விழாவில் 596 பேருக்கு குடியரசு தலைவர் மற்றும் முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும் அத்திவரதர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 60 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. விழாவின் தொடக்கத்தில் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மேலும் விழாவையொட்டி, அரங்கம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here