TN CM Blast Stalin
TN CM Blast Stalin

கொரானா அதிகம் பரவ ஸ்டாலின் தான் காரணம் என முதல்வர் பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

TN CM Blast Stalin : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென 5 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சுஷாந்த் சிங்கிற்கு நடந்தது போல எனக்கும் நடந்துள்ளது – அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழ் நடிகை

இந்த நிலையில் முதல்வர் ஈபிஎஸ் எந்தவித வழிமுறைகளையும் பின்பற்றாமல் திமுகவினர் நிவாரண உதவி வழங்கியதே கொரோனா தொற்று அதிகம் பரவியதற்கு காரணம் என கூறியுள்ளார்.

ஸ்டாலின் உத்தரவை ஏற்று கொரானா நிவாரணப் பணிகளை மேற்கொண்ட திமுக எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தார். மருத்துவ குழுவின் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட்டிருந்தால் ஒரு எம்எல்ஏவை அவர் இழந்திருக்க மாட்டார் என கூறியுள்ளார்.