TN Budget OPS
TN Budget OPS

TN Budget OPS – சென்னை: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டபேரவை வந்தார்.

தமிழக பட்ஜெட்டின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 2-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் துவங்கியது.

பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. 8-ஆம் தேதி முதல்வர் எடப்பாடியின் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.

இந்நிலையில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.

நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 8-ஆவது முறையாக ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்காக சட்டசபையில் அவரது இருக்கையில் தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் வர இருப்பதால் வழக்கம் போல் இல்லாமல் புதிய அறிவிப்புகளும் சலுகைகளையும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என தெரிகிறது.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய துணைமுதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டபேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here