TN BJP Wishes to Security Short Film Team
TN BJP Wishes to Security Short Film Team

தேசப்பற்று மிக்க குறும்படம் செக்யூரிட்டி என அக்குறும்படத்தின் இயக்குனரும் நடிகருமான உதயாவை தமிழக பாஜகவினர் பாராட்டியுள்ளனர்.

TN BJP Wishes to Security Short Film Team : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயா.

இவர் முதல் முறையாக செக்யூரிட்டி என்ற குறும்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். தேசப்பற்று மிக்க இக்குறும்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் இந்த குறும்படத்திற்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தது.

இந்த நிலையில் தற்போது தமிழக பாஜக மாநில தலைவர் திரு முருகன், நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் நடிகை குட்டி பத்மினி ஆகியோர் செக்யூரிட்டி குறும் படத்தை பாராட்டும் விதமாக அக்குழு படக்குழுவினரை பாராட்டி மரியாதை செலுத்தியுள்ளனர்.