TMDEWA supports MNM
TMDEWA supports MNM

சென்னை: வரும் லோக்சபா மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு அளித்து உள்ளது.

லோக்சபா மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அதன் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளுக்கு அடுத்தபடியாக தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நல்ல வாக்குகளை பெறும் என்று மக்களிடையே சில கருத்து நிலைவி வருகிறது.

இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சிறு சிறு இயக்கங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆவின் மற்றும் தமிழ்நாடு தனியார் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆதரவு அளித்து இருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் இன்று கமல்ஹாசனை நேரில் சந்தித்த ஆவின் மற்றும் தமிழ்நாடு தனியார் பால் முகவர்கள், எதிர்வரும் தேர்தலில் தங்களின் ஆதரவை அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த இயக்கம் ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி கமல்ஹாசன் தமது நன்றியை தெரிவித்தார்.