TKS Natarajan Passes Away

பழம்பெரும் நடிகரும் பாடகருமான டி கே எஸ் நடராஜன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

TKS Natarajan Passes Away : தமிழ் சினிமாவில் நடிகர் பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் கே எஸ் நடராஜன். இவர் சிவாஜி எம்ஜிஆர் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் என்னடி முனியம்மா கண்ணுல மையி என்ற பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது 87 வயதாகும் இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.