Title Secrets of Guna Movie

கமல்ஹாசன் நடித்த குணா படத்திற்கு முதலில் என்ன டைட்டில் வைத்தார்கள் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Title Secrets of Guna Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று குணா. இந்தப் படத்தினை இயக்குனர் சந்தானபாரதி இயக்கியிருந்தார்.

படத்தில் கமலுக்கு ஜோடியாக ரேகா, ரோஷினி ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது மதிகெட்டான் சோலை என்று தான் பெயர் வைக்க இருந்துள்ளனர். அதன் பின்னர்தான் இந்த டைட்டிலை மாற்றி குணா என பெயர் வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிகெட்டான் சோலை என்ற டைட்டிலை கேட்ட ரசிகர்கள் என்னது இப்படியொரு டைட்டிலை வைக்க இருந்தார்களா என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.