Tirunelveli Police Wishes to Vijay Fans
Tirunelveli Police Wishes to Vijay Fans

விஜய் ரசிகர்கள் செய்த உதவியை திருநெல்வேலி போலீஸ் பாராட்டியுள்ளார்.

Tirunelveli Police Wishes to Vijay Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

தளபதி விஜயின் பிறந்தநாள் கடந்த ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக ரசிகர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டினார்.

ஆனால் தளபதி விஜய் எந்த வித கொண்டாட்டம் வேண்டாம் அவரவர் அவர் அவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் என கூறியிருந்தார்.

இதனையடுத்து தளபதி விஜய் ரசிகர்கள் ஒன்று கூடி கொண்டாடும் கொண்டாட்டங்களை தவிர்த்தனர். அதற்கு பதிலாக விஜய் ரசிகர்கள் பல்வேறு நலதிட்ட உதவிகளை மேற்கொண்டனர்.

யு ஆர் தி ரியல் ஹீரோ.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட பாராட்டு வீடியோ – யாரை பாராட்டியுள்ளார் பாருங்க!

அந்த வகையில் திருநெல்வேலி போலீஸ் நெல்லை மாவட்ட பயன்பாட்டிற்காக பேரிகார்ட்டுகளை வழங்கி உள்ளனர்.

இது குறித்து அம்மாவட்ட போலீஸ் அதிகாரி அர்ஜுன் சரவணன் விஜய் ரசிகர்களை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் திரு விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 22) நெல்லை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக பேரிகார்டுகளை வழங்கிய நெல்லை மாவட்ட தலைமை இணையதள விஜய் மக்கள் இயக்கத்திற்கு @NellaiVMI_Off மனமார்ந்த நன்றி.
உங்கள் சமூக பார்வை தொடரட்டும் . மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் அதிகாரியின் இந்த பதிவுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/NellaiVMI_Off/status/1277223283390205953?s=19