Tips for Remove Blacks :
Tips for Remove Blacks :

Tips for Remove Blacks :

கை, கால் முட்டிகளின் கருமை நீங்கி முட்டிகள் மிருதுவாக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்.. .

☆ முட்டிகளின் கருமை நீங்க, எளிய வழிகள்:

1. பால், எலுமிச்சை மற்றும் சர்க்கரை:
பால் –கால் கப், எலுமிச்சை — 2, சர்க்கரை — 2 டீஸ்பூன். முதலில் கை, கால் முட்டிகளின் மீது பாலை தெளித்து, மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் எலுமிச்சை பகுதியை சர்க்கரையில் தொட்டு முட்டிகளின் மீது, நன்கு தேய்க்க வேண்டும்.

பிறகு தண்ணீரால் முட்டிகளை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், முட்டி தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

2. மஞ்சள் மற்றும் பசும்பால்:

மஞ்சள் — 2 டீஸ்பூன், பசும்பால் — கால் கப். தோலின் மீது உள்ள இறந்த செல்களை, உடனடியாக அகற்றும் வல்லமை மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் தூளுடன்,
பசும்பால் கலந்து, முட்டியின் மீது தடவி 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் லோஷன் அல்லது சோப்பை பயன்படுத்தி அப்பகுதியை கழுவவேண்டும். தினந்தோறும் இதைச் செய்து வந்தால், சில நாட்களில் நல்ல மாற்றத்தை காணலாம்.

3. கற்றாழை:

சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும் சக்தி கற்றாழைக்கு உண்டு.

கற்றாழையை வெட்டி வந்து, அதன் தோலை சீவி விட்டு உள்ளிருக்கும் ஜெல் போன்ற பசையை முட்டி பகுதியில் பூசி, 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், ஒரு வாரத்தில் தோல் மிருதுவாகும்.

4. எலுமிச்சை மற்றும் தேன்:

எலுமிச்சை — 4, தேன் 5 டீஸ்பூன். எலுமிச்சையை பாதியாக வெட்டி கொள்ளவும். ஒவ்வொரு பகுதியாக தேனில் தொட்டு முட்டியின் மீது,  நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட வேண்டும்.

பின்னர் தண்ணீரால் கழுவ வேண்டும். அதிக அளவு தேன் சேர்த்து மசாஜ் செய்தால் கருமை விரைவில் மறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here