Tips for Reducing Cooling
Tips for Reducing Cooling

1) வெள்ளரிக்காயை அரைத்து குளிப்பதற்கு முன்னால் உடல் முழுவதும் பூசி வைத்திருந்து பின்பு குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும். உடல் பட்டுப் போல மிருதுவாகும்.

2) ரோஜா இதழ்களை இடித்து சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.

3) மாதுளம் பழச்சாறுடன் கற்கண்டு கலந்து பருகி வந்தால் உடலில் குளிர்ச்சி ஏற்படும்.

4) கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

5) நன்னாரி வேர்ப்பட்டையை கொதிக்க வைத்து முலாம் பழச்சதையுடன் கலந்து சீனி சேர்த்து குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

6) பச்சை வாழைப்பழத்தை சாப்பிட உடல் குளிர்ச்சி உண்டாகும்.

7) செம்பருத்திப்பூ இதழ்களை அரைத்து, பாலுடன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும்.

8) மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

9) அருநெல்லி இலை, மோர் இவைகளை குடிக்க உடல் குளிர்ச்சி பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here