Tips for good sleep :
Tips for good sleep :

Tips for good sleep :  இரவில் தூக்கம் வரவில்லையா? இதனை பின்பற்றுங்கள், தூக்கம் கண்ணை மறைக்கும்.

தூக்கத்திற்கான டிப்ஸ்:

☆ ஒரு தேக்கரண்டி அளவு சோம்பை எடுத்து, அதில் 250 மில்லி தண்ணீர் விட்டு நன்கு மூடி வைத்து, 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு பால் மற்றும் தேன் கலந்து படுக்க போகும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

☆ வெங்காயம்,உப்பு இரண்டையும் நீரில் கொதிக்க வைத்து அதனை சுடுச்சோற்றுடன் கலந்து சாப்பிட சுகமான தூக்கம் வரும்.

☆ பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட‌ தூக்கமின்மை குறையும்.

☆ அரைக்கீரை, சீரகம் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட தூக்கமின்மை குறையும்.

☆ மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

☆ ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும்.

☆ ஜாதிக்காய் பொடியுடன், நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

☆ வெள்ளரி விதைகளை அரைத்து, பாலில் குடித்து வர தூக்கமின்மை குறையும்.

☆ பேரீட்சை, முருங்கை, ஆப்பிள், எலுமிச்சை, கேரட், திராட்சை, தேங்காய் பால், கொத்தமல்லி, நெல்லி இவைகளை சாப்பிட தூக்கமின்மை குறையும்.

☆ இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் தூக்கமின்மை குறையும்.

☆ இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.

☆ பாலில் ஒருதேக்கரண்டி தேன் கலந்து படுக்க போகும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

☆ தர்ப்பை புல்லை தலையணை கீழ் வைத்து படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

☆ மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து நெருப்பில் போட்டு புகை பிடித்தால் தூக்கம் வரும்.

☆ நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

☆ வேப்பிலையை நன்கு வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும்.

☆ அரை கப் ஆரஞ்சு பழச்சாற்றில் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனை கலக்கி படுக்கைக்குப் போகும் அரைமணி நேரத்திற்கு முன் சாப்பிட தூக்கம் வரும்.

☆ திப்பிலி கொடியின் வேரை எடுத்து இடித்து, பொடி செய்து, பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here