பிரபல தொலைக்காட்சகி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. 16 பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது ரித்விகா, ஜனனி, பாலாஜி, யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் மட்டுமே உள்ளனர்.மேலும் இந்த வாரம் இரண்டு நாமினேஷன் எனவும் பிக் பாஸ் அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் 100 நாட்களாக இருந்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 105 நாட்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது விஜய் டிவியில் வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் அரண்மனை கிளி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆம், வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் அடுத்த 5 நாளைக்கு பிக் பாஸ் சீசன் 2 இரவு 9 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என விஜய் டிவி அறிவித்துள்ளது.