Tik tok Ban in America
Tik tok Ban in America

Tik tok Ban in America : இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் சீன நிறுவனங்களின் டிக்டாக், விசாட் செடிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான இரு தனித்தனி உத்தரவு களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந்திய- சீன எல்லை அச்சுறுத்தலுக்கு எதிரொலியாக, பாதுகாப்பு கருதி கடந்த ஜூன் மாத இறுதியில் இந்தியா 59 சீன செயலிகளையும் அதன்பின் ஜூலை மாதம் 47 சீன செயல்களையும் தடை செய்தது.

அமெரிக்காவில் டிக்டாக் செயலியை 8 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

விசாட் செயலுக்கான தடை தொடர்பாக வெளியிட்ட உத்தரவில், சீனாவைச் சேர்ந்த விசாட் செயலி தகவல் பரிமாற்றம், மின்னணு பணப்பரிமாற்றம் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த செயலியும் தன்னிச்சையாக அமெரிக்காவின் தகவல்களை சேகரிக்கிறது. ஏனென்றால் சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுகிறது.

இந்த செயலி மூலம் கிடைக்கும் தகவல்களை சீன அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே ‘டிக்-டாக்’ ‘விசாட்’ செயலிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.