Thupparivaalan 2 shoot in Abroads | Vishal | Andrea Jeremiah | Prasanna | Mysskin | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

Thupparivaalan 2 shoot in Abroads :

துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு துருக்கி, இஸ்தான்புல், லண்டன் போன்ற நாடுகளில் ஆகஸ்டில் துவங்கி நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

விஷால் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துப்பறிவாளன்.

ஒரு படத்துக்காக பிக் பாஸ் 3-க்கு நோ சொல்லும் பிரபல நடிகை – உண்மைதானா?

ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலை கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கினே இந்த படத்தையும் இயக்கவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெளிநாடுகளில்தான் நடைபெறவுள்ளதாம்.

ஏற்கனவே சுந்தர் சி படத்துக்காக இரண்டு மாதங்கள் துருக்கியில் தங்கியிருக்கும் விஷால், அடுத்து இந்த படத்தையும் பிரம்மாண்டமாக எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

அந்த வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, இஸ்தான்புல், லண்டன் போன்ற நாடுகளில் ஆகஸ்டில் துவங்கி நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

இதுபோக இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்திலும் விஷால் நடிக்கவுள்ளார். பி.எஸ்.மித்ரனுக்கு பதிலாக அறிமுக இயக்குனர் ஆனந்த் இப்படத்தை இயக்குகிறாராம்.

சுந்தர் சி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம் விஷால்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.