விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து தூக்கப்பட்டுள்ளார்.

Thupparivaalan 2 New Director : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் மிஸ்கின். இவரது இயக்கத்தில் விஷாலின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் துப்பறிவாளன்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்த நிலையில் படத்தின் பட்ஜெட்டை மிஸ்கின் இழுத்து விட்டதாலும் விஷாலுடன் ஏற்பட்ட மனக்கசப்பாலும் அவர் தூக்கி வீசப்பட்டார்.

OMG.. 40 வயதாகும் நடிகை மீனாவா இது?? ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இதனையடுத்து விஷால் பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் தற்போது துப்பறிவாளன் 2 படத்திற்கான இயக்குனரை தேடி வருகிறது.

இது குறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றையும் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது, இதற்கெல்லாம் சம்மதம் என்றால் அந்த இயக்குனரை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.