Thupparivaalan 2 Movie Status

துப்பறிவாளன் 2 படம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

Thupparivaalan 2 Movie Status : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் துப்பறிவாளன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது‌.

திடீரென மிஷ்கினுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த படத்தின் மீதியினை நானே இயக்குவேன் என விஷால் அறிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்பை தொடர்ந்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்த படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது எனிமி படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக அடங்கமறு இயக்கத்தில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் து.ப சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க உள்ளார்.

அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருந்து வருவதால் துப்பறிவாளன் 2 படத்தை தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.