Thupparivaalan 2 Director Update
Thupparivaalan 2 Director Update

விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் தற்போது முடிந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க மிஷ்கின் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Thupparivaalan 2 Director Update : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மிஸ்கின். இவரது இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் துப்பறிவாளன் 2.

இந்த படத்தின்படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் மிஷ்கின் தேவையில்லாமல் அதிக செலவு செய்வதாக படத்தின் தயாரிப்பாளரான விஷால் அவருடன் சண்டையிட்டதால் இவர்களின் கூட்டணி முறிந்தது.

இதனையடுத்து மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிக் கொண்டார். மேலும் விஷாலே துப்பறிவாளன் 2 படத்தை இயக்க இருப்பதாக அறிவித்து இருந்தார்.

இந்தியன் 2 வருமா? வராதா? – இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.!

ஆனால் அதன் பின்னர் இவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தை சக்சஸ் ஆகி பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வந்துள்ளது.

இதனால் விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தை மீண்டும் மிஸ்கின் அவர்களே இயக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.