Thuppakki Munai Review
Thuppakki Munai Review

Thuppakki Munai Review : தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஹன்ஷிகா மோத்வானி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள படம் துப்பாக்கி முனை.

கதைகளம் :

என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு, தவறு செய்பவர்களை பட்டு பட்டுனு என என்கவுண்டர் செய்யும் மனிதராக நடித்துள்ளார்.

அப்படியான விக்ரம் பிரபுவிடம் 15 வயது சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கை கொடுக்கின்றனர்.

ஆரம்பத்தில் குற்றவாளி என ஒருவர் மீது போலீசார் குறி வைத்துள்ளனர், விக்ரம் பிரபு இந்த கேஸை எடுத்த பிறகு இந்த கற்பழிப்பு விவகாரத்தில் பல முடிச்சுகள் அவிழ்கின்றன.

குற்றவாளி என கூறப்பட்டு வருபவர் ஒரு அப்பாவி என விக்ரம் பிரபுவிற்கு தெரிய வருகிறது.

அதன் பின்னர் இந்த அப்பாவியை எப்படி தப்பிக்க வைக்கிறார். உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்தாரா? இல்லையா?

கற்பழித்து கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? இப்படத்தில் எம்.பாஸ்கருக்கு என்ன வேலை என்பது தான் சுவாரஷ்யம் கலந்த மீதி கதை.

விக்ரம் பிரபு :

விக்ரம் பிரபு எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இந்த படத்திலும் அப்படி தான் பிட்டான போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் அப்பாவியை தப்பிக்க வைக்கும் காட்சிகளில் விக்ரம் பிரபுவின் நடிப்பு அபாரம்.

ஹன்ஷிகா மோத்வானி :

எப்போதும் பப்லியாக பார்த்து பழகி விட்ட ஹன்ஷிகா தற்போது இந்த படத்தில் மிகவும் உடல் எடையை குறைத்து குச்சி போல தோற்றமளிக்கிறார்.

ஹன்ஷிகாவின் கதாபாத்திரத்துக்கு பெரியதாக ஸ்கோப் இல்லை என்றாலும் தன்னுடைய பங்கை அருமையாக நடித்து கொடுத்துள்ளார்.

எம்.எஸ் பாஸ்கர் :

எம். எஸ் பாஸ்கரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது. தந்தை மகளுக்கு இடையேயான பாச பிணைப்பு, எமோஷனல் காட்சிகள் ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது.

தொழில்நுட்பம் :

இசை :

முது கணேஷ் எல்.வி என்பவரின் இசை படத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. படத்தின் பின்னணி இசை பிரமாதமாக அமைந்துள்ளது. படத்தில் ஒரே ஒரு பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

ராசமதியின் கச்சிதமான ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்க உதவியுள்ளது.

அதே போல் விறுவிறுப்பான போலீஸ் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் அழகான கோர்வையாக கொடுத்துள்ளார் எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன்.

இயக்குனர் தினேஷ் செல்வராஜ் :

இயக்குனர் தினேஷ் செல்வராஜ் வழக்கமாக போலீஸ் கதையை கையில் எடுத்து இருந்தாலும் வித்தியாசமான விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

விறுவிறுப்பான கமர்சியல் கலந்த படத்தில் பெற்றோர்களுக்கும் பெண்களுக்கும் தேவையான விழிப்புணர்வை பற்றி எதார்த்தமாக பேசி இருப்பது பாராட்டத்தக்கது.

தம்ப்ஸ் அப் :

1. விக்ரம் பிரபு நடிப்பு
2. எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு
3. சமூக கருத்து

தம்ப்ஸ் டவுன் :

1. சில இடங்களில் லாஜிக் இல்லாத காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் படத்தின் அடுத்த காட்சியை பார்க்கும் போது அவை அத்தனையும் மறைந்து விடுகின்றன.