thuppakki 2

Thuppakki 2 : மீண்டும் விஜயுடன் இணைந்து துப்பாக்கி 2 படத்தை இயக்க இருப்பதாக முருகதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அது குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான முருகதாஸ் தளபதி விஜயை வைத்து கத்தி, துப்பாக்கி, சர்க்கார் என மூன்று படங்களை இயக்கி விட்டார். இந்த மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றன.

விஜய் டாப்ல இருக்கார், ஆனால் அஜித் சினிமாவிலே இல்லை? – பிரபல நடிகை ஓபன் டாக்.!

மேலும் ரசிகர்கள் பலரும் தற்போது துப்பாக்கி 2 படத்திற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். முருகதாஸும் நிச்சயம் துப்பாக்கி 2 உருவாகும் என உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார் முருகதாஸ். அப்போது துப்பாக்கி 2 படம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு முருகதாஸ் துப்பாக்கி 2 படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here