துணிவு திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் அவர்கள் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தின் ட்ரெய்லர்… குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்.!!

ஜிப்ரான் இசையமைப்பில் ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.

துணிவு படத்தின் ட்ரெய்லர்… குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்.!!

அதன்படி வரும் டிசம்பர் 31ஆம் தேதி துணிவு நாள் என்று படகுழு சொல்லப்பட்டிருந்த நாளில் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று தகவல் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இதனை ரசிகர்களும் புதிய போஸ்டருடன் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.