OTT-ல் வெளியானதும் துணிவு படைத்த சாதனை குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் துணிவு.

எச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படம் 250 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்ததை தொடர்ந்து இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

OTT-ல் வெளியான 24 மணி நேரத்தில் 27 நாடுகளில் டாப் 10 இடங்களில் ட்ரெண்டிங்கில் துணிவு திரைப்படம் இடம் பிடித்துள்ளது.

இந்திய சினிமாவில் எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை இந்த படம் படைத்திருப்பதாக அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் இதனை கொண்டாடி வருகின்றனர்.