துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமையை விநியோகிஸ்தர்கள் மிக குறைந்த விலைக்கு கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு துணிவு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அடிமாட்டு விலைக்கு துணிவு படத்தைக் கேட்கும் விநியோகிஸ்தர்கள்.. வெளிநாட்டில் அஜித் படத்துக்கு வந்த சோதனை

அதே சமயம் இவர்களது கூட்டணியில் இதற்கு முன்னதாக வெளியான மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை என இரண்டு படங்களும் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத காரணத்தினால் இந்த படம் எப்படி இருக்கும் என்ற அச்சமும் இருந்து வருகிறது.

இதன் காரணமாக இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை விநியோகிஸ்தர்கள் மிக குறைந்த விலைக்கு ( 18 கோடியென சொல்லப்படுகிறது ) கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தளபதி விஜயின் வாரிசு படத்தின் உரிமையின் பாதி அளவுத் தொகைக்கு இந்த படத்தின் உரிமையை வாங்க தயாராக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வரை வருகிறது.

அடிமாட்டு விலைக்கு துணிவு படத்தைக் கேட்கும் விநியோகிஸ்தர்கள்.. வெளிநாட்டில் அஜித் படத்துக்கு வந்த சோதனை

இதனால் அஜித் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.