துணிவு திரைப்படத்தின் நியூ ப்ரோமோவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வளம் வரும் தல அஜித் குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகையின் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதியான நாளை துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

துணிவு திரைப்படத்தின்… நியூ ப்ரோமோ வைரல்.!

பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு ஹாலிவுட் லெவலில் உருவாகி இருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்தோடு இருந்து வரும் நிலையில் தல ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தும் வகையில் நாளை வெளியாக இருக்கும் இப்படத்திற்கான புதிய புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.