இணையதளத்தில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகளில் மேக்கிங் வீடியோ வைரல்.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஆக்சன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. 50 வினாடிகள் கொண்டிருந்த அந்த வீடியோ அஜித் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதுவும் தற்போது இணையத்தை மிரட்டி வைரலாகி வருகிறது.