நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் விஜயின் வாரிசு திரைப்படத்துடன் கடும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகும் “துணிவு” திரைப்படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிப்பு ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குடும்பத்திற்காக பழிவாங்குகிறார் அஜித்!!… வாரிசு படுத்துத்துடன் கடும் போட்டியில் துணிவு!.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரகனி மற்றும் பல திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு முழு வீச்சில் செயல்பட்டு வரும் நிலையில் துணிவு ஆக்சன் படம் மட்டுமின்றி ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படம் கூட என்ற தகவல் வெளியாகி உள்ளது.

குடும்பத்திற்காக பழிவாங்குகிறார் அஜித்!!… வாரிசு படுத்துத்துடன் கடும் போட்டியில் துணிவு!.

அதாவது இப்படத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைக்காக அஜித் சிலரை பழிவாங்குகிறார். இந்தக் காட்சி கண்டிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸை அப்படியே கவரும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதனால் வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப படமாக வெளியாக இருக்கும் விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு அஜித்தின் துணிவு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.