2023 நம்பர் ஒன் திரைப்படம் துணிவு தான் என வெளியான அறிவிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Thunivu Got Number 1 Place in Netflix : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் வெளியான படங்களில் அதிக பார்வையாளர்களைப் பற்றி முதல் இடத்தை பெற்ற திரைப்படமாக துணிவு இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.