பட்டைய கிளப்பும் துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச். வினோத் அவர்களுடன் கூட்டணி அமைத்து போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 61 வது படத்தில் நடித்து வருகிறார்.

பட்டைய கிளப்பும் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. பட்டைய கிளப்பும் புகைப்படம்.!!

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. அஜித் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் வல்லமை ராபரி என இருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் நேற்று துணிவே துணை என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் துணிவு என அறிவிக்கப்பட்டது.

பட்டைய கிளப்பும் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. பட்டைய கிளப்பும் புகைப்படம்.!!

படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது.