துணிவு திரைப்படத்தின் கேங்ஸ்டா பாடலின் லிரிக்ஸ் புகைப்படம் வெளியாகி உள்ளது.

அல்டிமேட் ஸ்டாராக கோலிவுட் திரை உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் தல அஜித் குமார் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ‘துணிவு’ திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

துணிவு… கேங்ஸ்டா பாடலின் லிரிக்ஸ் புகைப்படம் வெளியானது.!

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலானதை தொடர்ந்து 3rd சிங்கிள் ட்ராக் குறித்த அப்டேட்டை ஜிப்ரான் வெளியிட்டுள்ளார்.

துணிவு… கேங்ஸ்டா பாடலின் லிரிக்ஸ் புகைப்படம் வெளியானது.!

அதில் இப்படத்தின் “கேங்ஸ்டா” பாடல் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை மிரட்டல் ஆன லுக்கில் இருக்கும் அஜித்தின் புதிய போஸ்டர் மற்றும் அப்பாடலின் லிரிக்ஸ் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.