அஜித் 61 படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த தகவல் உறுதியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை என இரண்டு திரைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக அஜித் 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடிக்க பல திரை உலக பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் டைட்டில் வல்லமை அல்லது ராபரியாக இருக்கலாம் என தகவல் பரவி இருந்தது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி படத்திற்கு இது இரண்டுமே டைட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.

அதாவது இந்த படத்திற்கு துணிவே துணை என டைட்டில் வைக்கப் போவதாகவும் தற்போது படக்குழு முடிவு செய்திருக்கும் டைட்டில் இதுதான் என தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும். இருந்த போதிலும் இதுவும் மாஸாக இருக்கு என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.