துணிவு திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசி புகைப்படங்கள் வைரல்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

அல்டிமேட் லுக்கில் துணிவு அஜித்!!… இணையத்தை தெறிக்க விடும் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் இதோ.!

மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உட்பட எக்கச்சக்கமான நடிகர் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இப்படத்திற்கான அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அல்டிமேட் லுக்கில் இருக்கும் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாகி இணையத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர்.