Thumbi Thullal Song From Cobra
Thumbi Thullal Song From Cobra

கோப்ரா படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

Thumbi Thullal Song From Cobra : தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இப்படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் தன்னுடைய சன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்து வருகிறார்.

சியான் விக்ரம் இப்படத்தில் 9 வேடங்களில் நடித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வானளவு உச்சத்தை தொட்டுள்ளது.

விரைவில் தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 4, போட்டியாளர்களுக்கு போடப்பட்டுள்ள முதல் கண்டிஷன் – வெளியான லேட்டஸ்ட் தகவல்கள்

மேலும் இப்படத்தின் தும்பி துள்ளல் என்ற முதல் சிங்கிள் ட்ராக் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என இரு தினங்களுக்கு முன்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தற்போது தும்பி துள்ளல் என்ற முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நிச்சயமாக அஜய், விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் கோப்ரா மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என விக்ரம் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

https://www.jiosaavn.com/album/thumbi-thullal-from-cobra/v7MgAkXlkNc_
YouTube video