Thulladha Manamum Thullum Movie Secrets
Thulladha Manamum ThullumThulladha Manamum Thullum Movie Secrets Movie Secrets

வடிவேலுக்காக எழுதிய படத்தில் விஜய் நடித்து ஹிட்டான கதை தற்போது தெரிய வந்துள்ளது.

Thulladha Manamum Thullum Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

விக்ரமையும் விட்டு வைக்காத தமிழ் படம் 2, படத்தில் இருந்து தூக்கப்பட்ட கெட்டப்பை வெளியிட்ட பிரபல நடிகர்.!

ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்படம் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் பழைய படங்கள் குறித்த சுவாரஷ்ய தகவல்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் தற்போது இன்னொரு தகவல் கிடைத்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியாகி இன்று வரை கொண்டாடப்படும் படமான துள்ளாத மனம் துள்ளும் படத்தில் முதலில் யார் நடிக்க இருந்தது என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

இயக்குனர் எழில் முதன் முதலில் இப்படத்தின் கதையை நடிகர் வடிவேலுக்கு தான் எழுதியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தான் இந்தக் கதையில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.