Thulasi uses
Thulasi uses

Thulasi uses :

பெருமாள் கோவிலுக்கு சென்றால் நமக்கு அளிக்கப்படும் துளசி தீர்த்தம் நிறைய பிரச்சனைகளை தீர்க்கும் என்று தெரியும்..

◇ கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளுக்கும் துளசியே மிகப் பெரிய மருந்து ஆகும்.

◇ கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர், உணவு எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். இந்த அறிகுறிகளில் இருந்து, இவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

◇ மனிதனின் உடல் நல்ல முறையில் இயங்க தேவையான ஐநூறுக்கும் மேலான செயல்களை செய்யும் ஒரே உறுப்பு கல்லீரல் தான.

கெட்டுப் போனாலோ அல்லது சிதைந்தாலோ, மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பும் கல்லீரல் மட்டுமே.

◇ அதிக புகை மற்றும் குடிபழக்கம் உள்ளவர்கள், இரவு அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுபவர்கள், அடிக்கடி காபி பழக்கமுள்ளவர்கள் இவர்களுக்கு தான் கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகிய நோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

◇ இப்போதைய கால கட்டத்தில் பலர் நாகரீகம் என்ற பெயரில் அந்த வாய்ப்பை அவர்களே உருவாக்கி கொள்கிறார்கள்.

◇ துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் ௭ல்லாம் வந்த சுவடு தெரியாமலும், பக்கவிளைவுகள் இல்லாமலும் போகும்.

◇ கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளை வராமல் தடுக்க இனி புகை ,மது, கொழுப்பு உணவுகளை அதிகம் உட்கொள்ளும் முறைகளை தவிர்த்து, துளசி நீர் , முறையான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி மேற்கொண்டு கல்லீரல் மண்ணீரல் காப்போம்.

◇ துளசி சளிக்கும் ஒரு எதிரி,ஆக துளசி நம் நுரையீரலையும் பாதுகாக்கும் ஒரு பொக்கிஷம். துளசி பெருமை சொல்லிக் கொண்டே போகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here