Thulasi Benefits : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம், Aanmeegam

Thulasi Benefits :

🕉 துளசிச்செடி தெய்வீகத்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடியை வளர்ப்பது அவசியம்.

🕉 சிறிது கறுப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி இருந்தால் இரட்டை செடியாகத்தான் வளர்க்க வேண்டும்.

🕉 வீட்டின் முன்னே அல்லது முற்றத்தில் வளர்க்கவும்.

🕉 துளசிக்கு நீரினை ஊற்றும்போது கடவுள் பெயர் சொல்லி தெளித்துவிட்டு வேரில் அளவோடு ஊற்ற வேண்டும்.

காது கேட்கவில்லையா? காது கேளாமைக்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாமா?

🕉 வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது துளசிச் செடிகளை வணங்கிவிட்டு சென்றால் எந்த சகுன பாதிப்பும் இல்லாமல், நமக்கு காரியம் நிறைவேறும் அல்லது கைகூடும்.

🕉 வீட்டிற்கு திரும்பிய பின் கை கால் கழுவியபின் துளசியைத் வணங்கினால் தீய சக்திகளின் தொல்லை இல்லாமல் நன்றாக வாழலாம்.

🕉 பெண்கள் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது துளசியிடம் விடைபெற்றுக் கொண்டு செல்லவேண்டும்.

🕉 பிறந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம் நீரூற்றி வழிபட வேண்டும். தீட்டு, தலைமுடி, எச்சில், கழிவுநீர் துளசி தாய் மீது படக்கூடாது.

🕉 துளசியானது லட்சுமியின் அம்சமாகும். ஆகவே அதனை நம் தாய் போல பாதுகாக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here