Thukkathle Pesupavara Neegal
Thukkathle Pesupavara Neegal

Thukkathle Pesupavara Neegal :

தூக்கத்தில் பேசுபவரா நீங்கள்? தடுக்கும் முறையையும் தெரிந்துகொள்ளலாம்.

😴 தூக்கத்தில் பேசுவது என்பது ‘சம்மிலாக்’ என அழைக்கப்படும் தூக்கக் கோளாறின் ஒரு வகையாகும்.

😴 பெண்களைவிட ஆண்களும், குழந்தைகளும் தான் தூக்கத்தில் அதிகம் பேசுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

😴 குறிப்பாக மூன்று வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் தூக்கத்தில் அதிகம் பேசுகின்றனர். தூக்கத்தில் நீங்கள் ரகசியங்களை ஒருபோதும் பேச மாட்டீர்கள். நீங்கள் பேசுவது பெரும்பாலும் யாருக்கும் புரியாது.

😴 அதிக மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை பாதிப்பு போன்றவை தூக்கத்தில் பேசுவதற்கு காரணமாக இருக்கலாம்.

😴 குறிப்பாக மது அருந்தி விட்டு தூங்கும் போது இந்த பிரச்சனை அதிகம் ஏற்படலாம். மேலும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்புள்ளது. பரம்பரை பிரச்சினையாகவும் இருக்கலாம்.

😴 தடுக்கும் முறை:
முதலில் நீங்கள் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். மது அருந்தும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வையுங்கள். இது எதுவுமே பயன் தரவில்லை, எனில் மருத்துவரை நாடுங்கள். மருந்துகளின் மூலமும் இதனை சரிசெய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here