thug life movie shooting wrapped
thug life movie shooting wrapped

தக் லைப் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மணிரத்தினம் இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும் திரிஷா, ஜெயம் ரவி, சிம்பு போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. மேலும் படக்குழுவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.