துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் மூன்று பாடல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் துணிவு திரைப்படம் வெளியாகிறது.

துணிவு திரைப்படத்தில் மூன்று பாடல்கள்!!… என்னென்ன தெரியுமா?? வெளியான அதிரடி அப்டேட்ஸ்..!!

மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட எக்கச்சக்கமான நடிகர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியிட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், டப்பிங் பணிகள் மற்றும் ஸ்ட்ராங் சூட்டிங் உள்ளிட்டவை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணிவு திரைப்படத்தில் மூன்று பாடல்கள்!!… என்னென்ன தெரியுமா?? வெளியான அதிரடி அப்டேட்ஸ்..!!

இந்நிலையில் இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படத்தின் முதல் பாடலுக்கு ‘சில்லா சில்லா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்த நிலையில் அடுத்த இரண்டு பாடல்களுக்கு ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டர்’ என்று தலைப்புகள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரவபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.