புதிய படம் ஒன்றில் மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்க இருப்பதாக சூப்பரான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் சூப்பர் ஸ்டார்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகிய மூவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க இருப்பதாக மாபெரும் லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

அதாவது கன்னட நடிகர் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் படம் ஒன்றில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மெயின் ரோலில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும், இரண்டாவது பாகத்தில் நடிகர் ரஜினியும் சிறப்பு கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.