2 படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்களில் ஒருவராக தடம் பதித்தவர் தியாகராஜன் குமாரராஜா. அவருடைய மூன்றாவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thiyagarajan KumaraRaja in Upcoming Movie : தமிழ் சினிமாவில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆரண்ய காண்டம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய முதல் படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது.

முதல் படத்தையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தினை இயக்கினார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக விஜய் சேதுபதி தேசிய விருதை பெற்றார். அதுமட்டுமல்லாமல் படம் பல்வேறு விருதுகளை வாங்கி இருந்தது.

இரண்டே படத்தில் தரமான இயக்குனராக தடம் பதித்த தியாகராஜன் குமாரராஜாவின் மூன்றாவது படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்.!!

தற்போது இவருடைய 3வது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவர் அடுத்து சயின்ஸ் பிக்ஷன் படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்கான கதையை எழுதி முடித்து விட்டதாகவும் விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.