Thiruvalluvar dressed in saffron and painted a religious dye BJP: Vaiko condemns!
Thiruvalluvar dressed in saffron and painted a religious dye BJP: Vaiko condemns!

சென்னை: திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மதச் சாயத்தை பூசி பாஜக ட்விட்டரில் படம் வெளியிட்டதை கண்டித்து வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத ரசீதுகளில் தமிழை புறக்கணித்தது கண்டனத்துக்குரியதாகும் என வைகோ கருத்து தெரிவித்துள்ளார். சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத ரசீதுகளை தேசிய தகவல் மையம் வடிவமைத்துள்ளது., மத்திய பாஜக அரசின் இந்தித் திணிப்புக்கு அதிமுக அரசு துணை நிற்கிறது.

பிரதமர் மோடி தமிழின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், இன்னொரு பக்கம் தமிழை அழிக்கும் செயல்கள் நடந்து வருகிறது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘திருக்குறள் நெறியை இந்துத்துவ சிமிழுக்குள் அடக்க நினைக்கும் மதவாத சக்திகளின் பண்பாடற்ற செயல்பாடுகளை பாஜக நிறுத்த வேண்டும்’ என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மதச் சாயத்தை பூசி பாஜக ட்விட்டரில் படம் வெளியிட்டது. இதனை கண்டித்து வைகோ பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் “திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் சிலை அவமதித்தவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.