உண்மையில் வலிமை திரைப்படம் லாபமா நஷ்டமா என வெளிப்படையாக பேசியுள்ளார் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன்.

Thirupur Subramanian About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உண்மையில் வலிமை திரைப்படம் ஹிட்டா? பிளாப்பா? ஓபன் ஆக தெரிவித்த விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன்.!!

இதுவரை இந்த படம் 190 கோடி வசூல் செய்துள்ளது வெகுவிரைவில் 200 கோடி வசூலை தாண்டும் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படம் குறித்து பேசியுள்ளார்.

இந்த படம் லாபமா நஷ்டமா என கேள்வி எழுப்பியதற்கு விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் வலிமை திரைப்படம் 20 நாட்கள் ஆகியும் பல திரையரங்குகளில் நல்ல கூட்டத்துடன் திரையிடப்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரை வலிமை திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக மிகப் பெரிய ஹிட் என்று கூறியுள்ளார்.

உண்மையில் வலிமை திரைப்படம் ஹிட்டா? பிளாப்பா? ஓபன் ஆக தெரிவித்த விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன்.!!

முக்கிய வினியோகஸ்தர்களில் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் இவ்வாறு கூறியிருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.