Thirupachi Movie Collection Report
14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திருப்பாச்சி படத்தின் வசூல் என்ன? எவ்வளவு லாபம் என்பதை பார்க்கலாம் வாங்க.

Thirupachi Movie Box Office Report : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கடந்த 2005 ஆம் ஆண்டில் பேரரசு இயக்கத்தில் ஆர்பி சவுத்ரி தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் திருப்பாச்சி.

அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஷன் படமாக உருவாகியிருந்த இந்தப் படம் வெறும் ரூபாய் 14 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது.

சைலன்ட்டான சன் பிக்சர்ஸ், சம்பளத்தை பாதியாக குறைத்த முருகதாஸ் – ரஜினி படத்தால் வந்த சோதனை, தளபதி 65 குறித்து வெளியான பரபரப்பு தகவல்

உலகம் முழுவதிலும் ரூபாய் 37 கோடி வசூல் செய்துள்ளது. உள்நாட்டில் அதாவது இந்தியாவில் மட்டுமே ரூபாய் 33 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வினியோகஸ்தர்களுக்கு ரூபாய் 16.65 கோடி ஷேர் கொடுத்துள்ளது. சென்னையில் மட்டும் ரூபாய் 1.5 கோடி ஷேர் கொடுத்துள்ளது.

இப்படத்தின் நூறாவது நாளில் தமிழகத்தில் இப்படம் கிட்டத்தட்ட 112 ஸ்கிரீன்களில் ஓடியுள்ளது. 200 ஆவது நாளில் 25 தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.