Thirumurugan Direct New Movie

13 வருடத்திற்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார் சன் டிவி பிரபலம் ஒருவர்.

Thirumurugan Direct New Movie : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கல்யாண மாலை உள்ளிட்ட வெற்றி சீரியல்களை இயக்கியவர் திருமுருகன்.

இந்த சீரியல்கள் மட்டுமில்லாமல் எம் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாவது ஆண்டு உள்ளிட்ட படங்களையும் இயக்கினார்.

இவர் வெள்ளி திரையில் படம் இயக்கி 13 வருடங்களாகி விட்ட நிலையில் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முன்னணி நடிகர் ஒருவரை வைத்து படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.