Thiruda Thirudi Movie Secrets

சூர்யா நடிக்கவிருந்த படத்தில் நடிகர் தனுஷ் நடித்து சூப்பர் ஹிட்டான படம் குறித்த சீக்ரெட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thiruda Thirudi Movie Secrets : தமிழ் சினிமாவில் தல அஜித் தவறவிட்ட பெரும்பாலான படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் நடிகர் சூர்யா. இவரும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை தவற விட்டுவிட்டார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் திருடா திருடி. இந்த படத்தை இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இயக்கியிருந்தார்.

விஜய் செடி நட்டது இருக்கட்டும்.. அந்த போட்டோவில் இத கவனிச்சீங்களா?? – அம்பலமாகும் உண்மைகள்

இதில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சாயா சிங் நடித்திருந்தார். ஆனால் முதலில் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இந்த படத்தின் கதையை நடிகர் சூர்யாவிடம் கூறியுள்ளார்.

படத்தின் கதையை நடிகர் சூர்யாவும் ரசித்து ரசித்து கேட்டுள்ளார். இறுதியில் நான் இப்போது தான் சீரியஸான கதைகளில் நடித்து வருகிறேன். இதனால் இந்த படத்தில் நடிக்கலாமா? வேணாமா? என குழப்பமாக இருப்பதாக கூறினார்.

இதனையடுத்து தான் இந்த கதையை தனுஷிடம் கூறியதாக இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.