நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ‘தேன்மொழி’ பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து ஓடிய திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலை வாரி குவித்தது.

திருச்சிற்றம்பலம்… தேன்மொழி பாடலின் வீடியோ வெளியீடு…!! உற்சாகத்தில் ரசிகர்கள்!.

இதில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் இந்தியாவில் மட்டும் இன்றி ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சிலும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

திருச்சிற்றம்பலம்… தேன்மொழி பாடலின் வீடியோ வெளியீடு…!! உற்சாகத்தில் ரசிகர்கள்!.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அனிருத் மற்றும் தனுஷ் காம்போவில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வைபை உருவாக்கியுள்ள நிலையில் இப்படத்தில் அனிருத் இசையில் தனுஷ் எழுதி சந்தோஷ நாராயணன் பாடி ரசிகர்களின் மதில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் “தேன்மொழி” பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. அது தற்பொழுது இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Thenmozhi - Official Video Song | Thiruchitrambalam | Dhanush | Anirudh | Sun Pictures