நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ‘பறக்க பறக்க துடிக்குதே’ பாடலுக்கு சீன ரசிகர்கள் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் இந்தியாவில் மட்டும் இன்றி ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த இரு நாடுகளிலும் 2022 ஆம் ஆண்டில் வெளியான 3வது மிகப் பெரிய தமிழ் படமாக தனுஷின் திருச்சிற்றம்பலம் மாறியதோடு தல அஜித்தின் வலிமை திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்று இருக்கும் “பறக்க பறக்க துடிக்குதே” என்ற பாடல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் அனைவரும் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்து அசத்தி வருகின்றனர். இதே போல் சீனாவிலும் ஒரு ஜோடி இந்த பாடலுக்கு அதேபோல் கியூட்டாக ஸ்டெப் போட்டு நடனம் ஆடியுள்ளனர். அந்த க்யூட்டான வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.