தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து இரண்டாவது பாடலின் ரிலீஸ் தேதியை ப்ரோமோ மூலம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர்,ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடலான “தாய் கிழவி” பாடல் ஜூன் 24ஆம் தேதி இணையத்தில் வெளியாகி பயங்கர ஹிட் அடித்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “மேகம் கருக்குதா” என்று தனுஷ் பாடிய பாடல் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று ப்ரோமோ வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.