முதல் மூன்று நாள் முடிவில் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் மணிரத்தினம் பலர் இயக்க முயற்சி செய்து முடியாமல் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல்வேறு மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வரவேற்பு கிடைத்து வந்தாலும் சில இடங்களில் எதிர்மறை விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

200 கோடியை தாண்டி சாதனை படைத்த பொன்னியின் செல்வன்...!! மூன்று நாளில் இவ்வளவு வசூலா?? அதிர வைக்கும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!.

முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இரண்டாவது நாளில் இப்படம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூல் செய்து இரண்டு நாள் முடிவில் ரூபாய் 150 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

200 கோடியை தாண்டி சாதனை படைத்த பொன்னியின் செல்வன்...!! மூன்று நாளில் இவ்வளவு வசூலா?? அதிர வைக்கும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!.

இந்நிலையில் இப்படம் முதல் மூன்று நாள் முடிவில் 230 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது அதிலும் தமிழகத்தில் மட்டும் 70 கோடி ரூபாயை பெற்றுள்ளது. மேலும் காலாண்டு விடுமுறை, விழாக்கால விடுமுறை என தொடர்ந்து வருவதால் இந்த வாரத்தின் இறுதிக்குள் இப்படம் 400 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் வெளிநாடுகளிலும் வசூலில் மாஸ் காட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.