thinai-recipes

தேவையான பொருட்கள்:
திணை அரிசி – 3/4 கப், பாசிப்பருப்பு – 1/4 கப்,
வெல்லம் பொடித்தது – 2 கப்,
நெய் – தேவைக்கேற்ப,
முந்திரி, ஏலக்காய் – தேவைக்கேற்ப,
தண்ணீர் – 4 1/4 கப்.

செய்முறை:
1) முதலில் திணை அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் சுத்தமாக கழுவி ஒரு குக்கரில் 4 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) பிறகு கால் கப் தண்ணீரில் பொடித்த வெல்லத்தைப் போட்டு கரைந்தவுடன் அதை வேக வைத்த பாசிப் பருப்பு கலவையில் கலந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவேண்டும்.
3) ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, முந்திரி, ஏலக்காய் பொடித்து வறுத்து அதனுடன் சேர்க்க வேண்டும்.
4) பிறகு மேலே நெய்யை ஊற்றி கலந்து வைக்க திணை சர்க்கரைப் பொங்கல் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here